சனி, 28 ஜூன், 2025

ஆடுமாமயில் மத்தகோகில சந்த விருத்தம்

ஆடுமாமயின் மீதுலாவிடு மாவினன்குடி காவலா
பாடுவார்பயில் பண்ணிலின்புறும் பைந்தமிழ்ச்சுவை பாவலா
வேடுவார்குயில் வள்ளிதேவியை வேண்டிநாடிடு காதலா
நாடுவார்பயி றீதிலன்பினி னாடுவோமுனை நாதனே

 

 சீர் பிரித்து:-

 

ஆடு மா மயில்  மீது உலாவிடும் ஆவினன்குடி காவலா

பாடுவார் பயில் பண்ணில் இன்புறும் பைந்தமிழ்ச் சுவை பாவலா

வேடுவார் குயில் வள்ளி தேவியை வேண்டி நாடிடு காதலா 

நாடுவார் பயில் தீது இல் அன்பினில் நாடுவோம் உனை நாதனே!

 

ஆடும் மா மயில், அல்லது , ஆடு மா(யானை) மயில் என்ற மூன்று வாகனங்களின் மீது உலாவிடும் ஆவினன்குடியின் கண் வாழும் காவலனே, நின்னைத் துதித்துப் பாடுவாரின் பண்ணிறைந்த பாடல்களின் மகிழ்பவனே, பைந்தமிழ்ச் சுவையின் பாவலனே, வேட்டுவ குயிலான வள்ளி தேவியை வேண்டி நாடிச் செல்லும் காதலனே, உன்னையே நாடுவார் (உனது அடியார்கள்) குற்றமற்ற அன்பினில் நின்னை நாடுவோம் எங்கள் தலைவனே! அடியாரின் சம்பந்தத்தின் சிறப்பு இங்கு சொல்லப் பெற்றதாம் 

You sport the mighty dancing peacock as your vehicle( or have the goat, elephant and peacock as your vehicle) oh Lord of Aavinankudi (Pazhani) who protects,  you rejoice in the musical beats that praise your valour and you yourself preside over the assembly of Thamizh poets,  You very much like the huntress clan Devi Valli whose speech is as sweet as a cuckoo, and willingly went by your bidding as a lover to shower your love, we find you in the true love showered by your devotees or seek the company of your true devotees as a means of searching you!

மத்தகோகிலம் என்ற வடமொழி யாப்பின் படி அமைந்துள்ள பாடல்,

 தானதானன தானதானன தானதானன தானனா 

என்னும் சந்தத்திற்கு  

"தேட்டருந்திறல்" என்ற பெருமாள் திருமொழி பத்துப் பாடல்கள் இவ் யாப்பில் அமைந்துள்ளது 

திருஞான சம்பந்தரரின் (“மானின் நேர்விழி” என்று தொடங்கும் பதிகமும் இவ் யாப்பிலமைந்துள்ளதைக் காணலாம்)

 

  

 

 

 படம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி