செவ்வாய், 15 ஜூலை, 2025

பாடுமாசு கவி விருத்தம் (சென்னி மலை)

பாடு மாசு கவி சந்த நாதர் புகழ் பீடு சென்னி மலையாம் 

கேடு மாசு ணமு யர்ந்த கங்கை நதி சூடி நின்ற மலையான் 

பாட மோது மறை முந்து கந்த செவி பாய வென்ற மலையாம் 

வேட மாது நகை சிந்த நின்ற வடி வேலன் சென்னி மலையாம்

 

 தான தானதன தான தானதன

தான தான தனனா  

 

 சீர் பிரித்து

பாடும் ஆசு கவி சந்த நாதர் புகழ் 

பீடு சென்னி மலையாம்

கேடு மாசுணம் உயர்ந்த கங்கை நதி

சூடி நின்ற மலையான்

பாடம் ஓது மறை முந்து கந்த செவி 

பாய என்ற மலையாம்

வேட மாது நகை சிந்த நின்ற வடி

வேலன் சென்னி மலையாம்

 

சந்த ஆசு கவி அருணகிரி நாதர் புகழ்ந்து பாடிய பெருமை உடைய சென்னி மலை, கேடு விளைவிக்கும் பெரும்பாம்பும், உயர்ந்த கங்கையையும் சூடும் சிவ சுடராக நின்ற அண்ணா மலையான் மறையின் முந்தான பிரணவத்தை ஓது கந்தா செவி பாயும்படி என்ற மலையாம், வேட மாதான வள்ளியம்மை தனது புன்சிரிப்புச் சிந்தும் வண்ணம் நின்ற வடி வேலனது சென்னி மலையாம் இது!

The king of rythmic structured poems who constructs them instantly, that Arunagirinathar's works have talked highly of Chenni hills, The Lord who wears snake, Ganges on his head and the one who stood as a pillar of fire, he asked his son to be his teacher and explain the meaning of pranava, such is the praiseworthiness of this hill, Huntress Devi bashfully smiled at her Lord Murugan, VadiVelan, its his mountain and requires all the praise! 

ஸ்ரீ சிரகிரி வேலவன்: சென்னிமலை தலபுராணம் சென்னி மலை முருகன்கோவில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி