வெள்ளி, 11 ஜூலை, 2025

நாமாட்சி வெண்பா

நாமாட்சி செய்வதாய் நாடொறு மார்தட்ட
னாமாட்சி யன்று நலிந்தொழியச் -சாமாட்சி
பாமாட்சி சாற்றிப் படைத்தவளைப் போற்றுவோங்
காமாட்சிக் காமாட்சி யென்று

 

 சீர் பிரித்து:-

நாம் ஆட்சி செய்வதாய் நாள் தொறும் மார் தட்டல்

நா மாட்சி அன்று நலிந்து ஒழியச் சாம் ஆட்சி

பா மாட்சி சாற்றிப் படைத்தவளைப் போற்றுவோம்

கா மாட்சிக் காமாட்சி என்று

 

நாம் தான் இங்கு ஆள்கிறோம் என்று நாள் தொறும் மார்தட்டிக் கொள்ளல் என்பது தகாத செயல், அது நாவுக்குப் பெருமை அன்று, என்றிருந்தாலும் நலிந்து ஒழிந்து சாவதற்கு நிற்கும் ஆட்சியே! அதனால் அவ்வாறு தற்பெருமைக் கிடங்கொடுக்காது பெருமை மிக்க பாக்களைச் சாற்றிப் படைத்த தாயைப்  போற்றுவோம் காப்பதற்கே புகழ் பெற்ற காமாட்சி என்று!

To think that we rule and brag about it is the biggest fallacy, it is not humility and it does not bring fame to our speech, this thought is very much on course of a big downfall and death! Having realized thus, using famous poems to sing the praises of the mother who creates us let us chant her name as " our famed savior" Kamakshi!

 

Kamakshi Wallpapers - Top Free Kamakshi Backgrounds - WallpaperAccess

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி