வியாழன், 10 ஜூலை, 2025

நிரையெனவரு கலி விருத்தம்

நிரையெனவரு மறைமுடிவதன் மடிதடவிடு மிடையன் சுரவருமரு பயமருந்திடு சிறுபசுவென விசயன் தெருளறிவுடை யருமடியர்க ளமுதெனசுவை மகிழும் அருளுரையென வமரிடைவரு மருமமுதினி னனையே

 

 

நிரை என வரும் மறை முடிவு அதன் மடி தடவிடும் இடையன் சுர வரும் அரு(ம்) பயம் அருந்திடு சிறு பசு என விஜயன் தெருள் அறிவுடை அரும் அடியர்கள் அமுது என சுவை மகிழும் அருள் உரை என அமர் இடை வரும் அரும் அமுதினில் நனையே ! 

 தனனனன தனனனன தனனனன தனனா

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி