புதன், 2 ஜூலை, 2025

தமிழ்ப்புலவர் பெண்பார்க்கும் வெண்பா

பெண்பார்க்கப் போனாலும் பீடு தமிழ்ப்புலவர்
கண்பார்க்குங் காட்சி கவிவடிவே - வெண்பாவா
விற்புருவம் வஞ்சியா வேல்விழிகள் செவ்விதழோ
கற்பனைக் கெட்டாக் கலி

 

 

 பெண் பார்க்கப் போனாலும் பீடு தமிழ்ப் புலவர்

கண் பார்க்கும் காட்சி கவி வடிவே - வெண்பாவா

வில் புருவம் வஞ்சியா வேல் விழிகள் செவ் இதழோ 

கற்பனைக்கு எட்டாக் கலி

 

ஒரு பெருமைக்குரிய தமிழ்ப்புலவர் பெண்பார்க்கச் செல்கிறார், அவருக்கு யாவுமே கவிவடிவாகவே தெரிகின்றது, அப்பெண்ணின் வில்லைப் போன்ற புருவத்தைப் பார்த்து இது வெண்பாவோ என்றும் , வேல் போன்ற விழிகள் வஞ்சிப்பாவோ என்றும் செவ்விதழ்கள் கற்பனைக்கும் எட்டாத கலிப்பாவோ என்றும் வியக்கிறார் 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி