பெண்பார்க்கும் போதெல்லாம் பின்னணியி னின்றவளே
கண்பார்க்குங் காட்சியே காமாட்சி - மண்பார்த்து
விண்பார்த்து அப்பானின் வெட்ட வெளிபார்த்து
மெண்பார்க்க வேலா துனை
பெண் பார்க்கும் போது எல்லாம் பின் அணியில் நின்றவளே
கண் பார்க்கும் காட்சியே காமாட்சி - மண் பார்த்து
விண் பார்த்து அப்பால் நின் வெட்ட வெளி பார்த்தும்
எண் பார்க்க ஏலாது உனை !
ஒரு பெண்ணைப் பார்க்கும் போது அதன் பின்னணியாக நிற்பவன் நீ தான் என உணர்கின்றேன், கண் பார்க்கும் பார்வை யாவும் நீ தானே காமாட்சி! என்றாலும் மண் பார்த்தும் , விண் பார்த்தும் அதற்கும் அப்பால் நின்ற வெட்ட வெளியைப் பார்த்தவர்கட்கும் எண்ணிப் பார்க்க முடியாது அப்பாலுக்கும் அப்பால் நீ!
When one sees a feminine form we realize the presence of you in the back ground oh Kamakshi, in fact you are all that our eyes see! Yet, for those who feel they have seen land, celestial planes and even the void beyond that, you are beyond their comprehension and elude them!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக