மழுவொருகை மறியொருகை வழுவினாதா
விழவொருகை யெழவொருகை விதியினேதா
தொழவிருகை யழவிருக ணளியுநீதா
நிழலிருகை நினைவொழிய நிசமுநீதா
மழு ஒரு கை மறி ஒரு கை வழுவில் நாதா
விழ ஒரு கை எழ ஒரு கை விதியின் ஏதா?
தொழ இரு கை அழ இரு கண் அளியும் நீதா
நிழல் இருகை நினைவு ஒழிய நிசமும் நீ தா !
மழுவை ஒரு கையில் மறியை ஒரு கையில் கொண்ட வழுவில்லாத நாதனே, (எமக்கு) விழுவதற்கு ஒரு கையும் எழுவதற்கு இன்னொரு கையும் உள்ளது விதியின் காரணித்தினாலா ? (உன்னைத்) தொழுவதற்கே இரு கைகளையும் உன்னை எண்ணி மனமுருகி அழுவதற்கே இரண்டு விழியும் நீ அருள வேண்டும் நீதியின் சொரூபமானவனே, அவ்வாறு செய்து நிழலில் உழலும் நிலையைத் தாண்டி, அந்நினைவே ஒழியும் படி ஆகி மெய்யை எமக்கு நீ தருவாயாக!
You hold axe in one hand and deer in the other oh blemishless one! Have we been given two hands by fate, one to rise and one to fall? Please grant us two hands to worship you and two eyes to shed tears in your prayers oh just one and ultimately lead us away from the allure of illusions and understand the ultimate truth.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக