பனிதரு பானிலவும் - படர்
பணிதரு பாழ்விடமும்
கனிதரு காரிகையும் - விடக்
கறுமிட றூறுகையும்
புனிதரும் பாவியரும் - தமிழ்ப்
புலவரு மேசுவரும்
உனதுரு வானவரே - அரை
உமையுரு வானவரே
பனி தரு பால் நிலவும் படர் பணி தரு பாழ் விடமும்
கனி தரு காரிகையும் விடக் கறு மிடறூறுகையும்
புனிதரும் பாவியரும் தமிழ்ப் புலவரும் ஏசுவரும்
உனது உரு ஆனவரே அரை உமை உருவானவரே
பனியைப் பொழியும் திங்களும், பாழ் நஞ்சை உமிழும் (உமது கழுத்தில்) படர்கின்ற பாம்பும், அமுதக் கனியைத் தரும் உமையம்மையும், ஆலகால விஷம் ஊறும் கறு மிடறும், புனிதர்களும் பாவிகளும், தமிழ்ப்புலவரும் வீணே ஏசுவோரும் யாவுமே உன்னிலிருந்தே வந்தார்கள் உமையைப் பாதியுருவாகக் கொண்ட வானவரே! இருமை யாவையும் உன்னுள் அடக்கம் என்றவாறு
The cool moon, venomous slithering snakes, Devi who gives immortal elixir, your throat where Haalahala poison is restrained, saints and sinners, learned ones and those who just while away their time in complaints, all have emanated from you oh Lord who has Uma as half of the form! - All dualities are contained within you!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக