மழலைதேயுங் கிழமைவார மாதமாண்டு வாழ்விலே
அழகுவந்த(ச்) சமயமாழ்ந்த வாழ்வைநாளு மிழிவுசெய்
பழமையான வழமையென்று வேலையாழ்ந்த வேளைபோய்
மழைவிழைந்த வுழவன்போலி(ந்) நொடியில்வாழு நெஞ்சமே
சீர் பிரித்து-
மழலை தேயும் கிழமை வாரம் மாதம் ஆண்டு வாழ்விலே
அழகு உவந்து அச் சமயம் ஆழ்ந்த வாழ்வை நாளும் இழிவு செய்(து)
பழமையான வழமை என்று வேலை ஆழ்ந்த வேளை போய்
மழை விழைந்த உழவன் போல் இந் நொடியில் வாழு நெஞ்சமே
பொருள்-
மழலை என்ற நிலை மிக விரைவில் தேய்கின்றது காலம் என்னும் சுழற்சியில், கிழமை, வாரம் மாதம் ஆண்டு என்றெல்லாம் விரைந்தோடி விடுகிறது, இதை அறிந்திருந்த நம் முன்னோர் ஒவ்வொரு பொழுதின் அழகிலும் உவந்து அந்த அந்த நேரத்தை ஆழ்ந்து அனுபவித்தனர், இவ்வழக்கை பழவழக்கு என்று இழிவு செய்தோம் பின்பு வேலையில் ஆழ்ந்தோம் பொருளின் மயக்கில்! இந்நிலை மாற வேண்டும், என்றுணர்ந்து நாம் மழையை வேண்டி நிற்கும் உழவனைப் போல நாமும் இந்நொடியில் ஆழ்ந்து வாழ வேண்டும்!
In the fast moving life, where the infant grows into adulthood very soon and the wheel of time of days weeks months and years roll quicker than one expects, enjoying the beauty in each phase and being deeply in that moment which was followed earlier was mocked at as outdated philosophy and we engrossed ourselves in work (materialism), but this has to change and we should go back to the state of being in the moment like a farmer who wishes rain!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக