செவ்வாய், 15 ஜூலை, 2025

மரங்குன்றாய்த் தரவு கொச்சகக் கலிப்பா

மரங்குன்றாய் நின்றானை மதிதவறிச் சென்றானை யுரங்குன்ற மாய்த்தானை யுமைதந்த வேலானைப் பரங்குன்றி னின்றானைக் கரிமுகற் கிளையானைச் சிரங்குன்றிப் புகழ்வானைக் கரங்கூப்பிப் பணிவோமே

 

 

மரம் குன்றாய் நின்றானை மதி தவறிச் சென்றானை

உரம் குன்ற மாய்த்தானை உமை மைந்த வேலானைப்

பரம் குன்றில் நின்றானைக் கரி முகற்கு இலையானைச்

சிரம் குன்றிப் புகழ்வானைக் கரம் கூப்பிப் பணிவோமே  

 

மா மரமாகவும் கிரவுஞ்ச மலையாகவும் நின்றவனும் மதி தவறித் தவறுகள் செய்தவனுமான சூரனை, உரம் குன்ற மாய்த்தவனமான, உமை தந்த வேல் உடையவனுமான பரம் குன்றில் நின்றவனுமான கரி முகனுக்கு இளையவனுமான முருகப் பெருமானை யார் ஒருவர் சிரம் தாழ்த்தி புகழ்கின்றாரோ அவரை நாம் கரம் கூப்பிப் பணிவோம். அடியார்களின் பெருமை கூறப்பட்டது!

 

He who destroyed Tarakusaran who stood as a mango tree and krouncha hill and commited several sins, that son of Uma whom she gave vEl to, and he who stood in Thirupparangunram and is the younger brother of Gajanana, to that Lord Murugan, whoever bows down and sings his praises, we join hands and bow down to that person!

 

சேய்த் தொண்டர்கள் (முருகன் அடியார்கள் வரலாறு) - பனையபுரம் அதியமான் - வானதி  பதிப்பகம் | panuval.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி