செவ்வாய், 29 ஜூலை, 2025

ஐந்தொழில் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

ஐந்தொழில் செவ்வனே செய்யையை வேலீய நைந்தொழியச் சூரை நகைநகைத்த - பைந்தமிழ் வேடமகள் வேழமகள் காதலா வீற்றிருவா நாடுமகன் பாட்டி னயந்து

 

 

ஐந்தொழில் செவ்வனே செய் ஐயை வேல் ஈய நைந்து ஒழியச் சூரை நகை நகைத்த பைந்தமிழ் வேடமகள் வேழமகள் காதலா வீற்று இரு வா நாடு மகன் பாட்டில் நயந்து 

 

ஆக்கல் அழித்தல் காத்தல் அருளல் மறைத்தல் என்னும் ஐந்தொழிலையும் செவ்வனே செய்யும் ஆதி பரா சக்தி வேலாயுதத்தை ஈயச் சூரனை அழிந்தொழியும்படி புன்னகைத்தாய்! பைந்தமிழையும் வள்ளி தேவானை தேவிகளையும் விரும்பும் காதலனே, உன்னை நாடும் மகன் பாட்டில் நயந்து வந்து அதில் நீ வீற்றிருக்க வருவாயாக 

 

She who does the fivefold duties of creation destruction protection grace and veiling, that Adi Parashakti gave you her powers in the form of a vEl , you used it to smilingly destroy Suran and his forces oh lover of Tamil Language, VaLLi Devi and DevasEna (Lord Muruga) come live happily in the song of the son who longs for you.

 

WhatisGod: Spiritual Significance of Lord முருகன் (murugan) and His  festivals 

 முருகன் கை வேல் பற்றிய சிறப்புகளை அறிந்து இன்புறலாம்... வேலாயுதம் தோன்றிய  வரலாறு தண்தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானின் ...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி