செவ்வாய், 29 ஜூலை, 2025

நாக விருத்தம்

 

நாகநன்று பூணுநாதர் ஞானம்வேண்டி மாணியாய் நாகமென்று நிற்குநின்னை நாகமென்று பணிந்தவந் நாகமொன்றி நினைவுகந்து நாகநாத நின்னையே நாகமென்று பணிந்துநிற்பர் நாகமாள்வர் ஞான்றுமே
 
 
நாகம் நன்று பூணு நாதர் ஞானம் வேண்டி மாணியாய் நாகம் என்றும் நிற்கும் நின்னை ந அஹம் என்று பணிந்த அந் நாகம் ஒன்றி நினைவு உகந்து நாக நாத நின்னையே ந அஹம் என்று பணிந்து நிற்பர் நாகம் ஆள்வர் ஞான்றுமே  
 
நல்ல நாகங்களை அணிகலன்கலாக பூணும் நாதரான சிவபிரான் பிரணவப் பொருளின் ஞானம் வேண்டி தான் ஒரு சிஷ்ய பாவத்தில் இருந்து மலைகளில் என்றும் நிலைப்பவனான நின்னை ந அஹம் என்ற பணிவுடன் பணிந்த அம் மலையான சுவாமி மலை என்னும் திருத்தலம் அடைந்து நினைவினால் உகந்து அத்திக்கிறையான உன்னையே பணிந்து நிற்கும் நின் அன்பர்கள் என்றுமே வானில் அரசாள்வராம்!
 
நாகம் - பாம்பு, மலை, ந அஹம்(நான் இல்லை), யானை, வானம்  
 
The God who sports snakes as ornaments (MahaDeva) wanted to listen to the meaning of PraNava mantra and took Sishya Bhava and approached you as a proper student accepting you as the teacher at the holy shrine of Swami Malai/ThiruvEragam. The devotees of yours who attain this place and fill their thoughts happily with you oh Lord of DevasEna (Muruga) and completely surrender to you by negating any self effort and attain a total sishya bhava are sure to rule the heavens and attain salvation by your grace!
 
திருவேரகம் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் (சுவாமிமலை ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி