செம்மேனி யண்ணல் சினக்கண் பொறியுதித்த வம்மானை யொத்த வழகுடைய பெம்மானைச் செம்மானின் செல்வியைக் கல்யாணஞ் செய்தானை நம்மேனி காண்ட றவம்
செம் மேனி அண்ணல் சினக் கண் பொறி உதித்த அம்மானை ஒத்த அழகு உடைய பெம்மானைச் செம்மானின் செல்வியைக் கல்யாணம் செய்தானை நம் மேனி காண்டல் தவம்
செம் மேனி உடைய சிவபெருமானின் (மன்மதனை எரித்த) சினக் கண்ணான மூன்றாம் கண்ணுதித்தவனுமான , தனது அம்மானான திருமாலின் அழகை உடைத்தவனுமான, செம்மானான இலக்குமியின் செல்வியான வள்ளி தேவியை மணந்தவனுமான பெருமானை நம்மேனியின் கண்களால் காண்பது என்பதே தவமாகும்.
You were born from spark of the ruddy complexioned Lord Shiva's eye of anger which burned Kama, your beauty is akin to that of your maternal uncle MahaVishnu, you married MahaLakshmi's daughter VaLLi, to see you with our bodily eyes is penance!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக