செவ்வாய், 22 ஜூலை, 2025

பொன்மேனி கட்டளைக் கலித்துறை

பொன்மேனி கொண்டான் புகழ்வேழ மைந்தன் புனமடைந்து பொன்மேனி கொண்டாள் புனமானா யீன்ற புதல்வியினைப் பொன்மேனி கொண்டான் புனல்மைந்தன் சென்று புணர்முடிக்கப் பொன்மேனி கொண்டு பொருகரி வேடம் புகுந்தனனே

 

 

பொன்னார் மேனியனான சிவ பெருமானின் புகழ்பெற்ற மைந்தன் ஆன வேழம் (பிள்ளையார்), ஹிரண்ய வருணத்தளான இலக்குமி தேவி புனத்தில் மானாக ஈன்றெடுத்த தனது புதல்வியான வள்ளி தேவியைச், செந்நிறத்தவனான கங்கை மைந்தன் முருகன் சென்று மணமுடிக்கும் படியாகப் தானும் ஒரு பொலிவான மேனி கொண்ட ஆக்ரோஷமான யானையாக வேடம் கொண்டார்!

 

The famous son of Gold Complexioned Lord Shiva with the face of an elephant entered the forest, to bring together the marriage of , the daughter of Golden complexioned MahaLakshmi whom she begot as a deer ( VaLLi Devi) and the golden complexioned Lord Murugan, by taking up the form of a lustrous and wild elephant!

படம் 

 படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி