சனி, 5 ஜூலை, 2025

விடமுடைய கலிவிருத்தம்

விடமுடைய படவரவு சடைமிடறு படர வடிவுடைய துடியிடைய ளிடமுடைய சுடர கடலெழு(ந்)த விடவிடரை மிடறட(ங்)கு சுடல திடமுடைய வடைவடைய நடியடியெம் விடையே

 

 சீர் பிரித்து-

விடம் உடைய பட அரவு சடை மிடறு படர 

வடிவுடைய துடி இடையள் இடம் உடைய சுடர! 

கடல் எழுந்த விட இடரை மிடறு அடங்கு சுடல! 

திடம் உடைய அடைவு அடைய நடி அடி எம் விடையே! 

 

தகதகிட தகதகிட தகதகித தகதா  

பொருள்- 

விடத்தை உடைய படமெடுக்கும் அரவு உன் சடையிலும் மிடற்றிலும் படரும் வண்ணம் உள்ள வடிவுடைய துடி இடையை உடைய உமா தேவியை இடப்பக்கமாக கொண்ட சுடரே! கடல் கடைந்த போது எழுந்த நஞ்சு ஏற்படுத்திய இடரை அந்நஞ்சை உனது மிடற்றில் அடக்கி காத்த சுடகாடுகளில் நடிப்பவனே, திடமுடைய அடைவான வீடு பேற்றை அடைய நினது நடனம் புரியும் அடியே எமக்கு விடையாகும்! 

You have poisonous and hooded snakes slithering in your neck and matted locks, you have the beautiful and hourglass shaped hipped Uma on your left side of bright one! You held the halahala poison that arose from the ocean churning in your neck oh Lord who roams the cremations grounds, in order to achieve the stable salvation your dancing foot is our solution or the way!

Shiva and Uma | The Walters Art Museum 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி