இசைத்தவாயொ ராயிர மியற்றுபாட னேர்பெறும் நசைத்துநாத னாமகீத நாதமோது நாளுமே விசைத்துவந்து தேவனே விழைத்தயாவு மருளிட இசைத்துவந்த கோதையா யியைந்தியைந்து வாழ்ந்திடே
இசைத்த வாய் ஓர் ஆயிரம் இயற்று பாடல் நேர் பெறும் நசைத்து நாதன் நாமம் கீத நாதம் ஓது நாளுமே விசைத்து வந்து தேவனே விழைந்த யாவும் அருளிட இசைத்து உவந்த கோதையாய் இயைந்து இயைந்து வாழ்ந்திடே
ஒரு பாடலை மனமுருகி இசைப்பதென்பது ஆயிரம் பாடலை இயற்றுவதற்கு நேர்! (ஆதலால்) தேவனே மிக விரைவில் வந்து நாம் விழைந்த யாவற்றையும் அருளும்படியாக அவன் மேல் நசைத்து அவன் நாமங்களை கீதநாதமாக நாளும் ஓதுக, இசைந்து உவந்து இயைந்து வாழ்ந்த கோதை போன்று!
Singing the glories of the Lord with musical fervour is as good as composing thousand poems on him, So, make him come quickly and grant all the desires by loving him and sing his names and glories as music all the time, like AandaL whose fervour and love for him was unmatched!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக