வெள்ளி, 4 ஜூலை, 2025

ஏழையேந்து சந்த விருத்தம் (திருவாழியாழ்வான் திருநட்சத்திரம்)

ஏழையேந்து தோயமலரொ டிலைகிடைக்க மகிழ்பவன்
ஊழையேந்தி வீறுமிடரை உயிரகற்று மாயவன்
தோழியேந்து மிடரகற்ற வாதுசூது செய்பவன்
நாழியேந்து தூயவாழி ஊழியூழி வாழியே 

 

 சீர் பிரித்து

ஏழை ஏந்து தோயம் மலரொடு இலை கிடைக்க மகிழ்பவன்

ஊழை ஏந்தி வீறும் இடரை உயிர் அகற்று மாயவன்

தோழி ஏந்தும் இடர் அகற்ற வாது சூது செய்பவன்

நாழி ஏந்து தூய ஆழி ஊழி ஊழி வாழியே

 

ஏழைகள் (ஜீவர்கள்) வெறும் தண்ணீரோ மலரோ இலையோ கொடுத்தால் போதும் அதில் மகிழ்பவனுமான, வினை வசப் பட்டு உயிர்கள் படும் துயரை களைகின்ற மாயவனுமான, தோழி பாஞ்சாலியின் இடரை அகற்ற மகாபாரதப் போரும் அதில் பல சூதுகளும் நடத்திக் காத்தவனுமான கண்ணனது, காலத்தை தன் வடிவாக வைத்துள்ள தூய சக்கரத்தாழ்வார் ஊழிதொறும் வாழியே! 

He who becomes extremely satisfied when simple people(Jivas) just offer him water, flower or leaf, that Mayan who removes the sufferings of Jivas as a result of their Karmas whence they surrender to him, he who enacted the Mahabaratha war with all its subsequent drama and deception to protect Draupadi, that Lord Krishna's Sudarshana Chakra which holds in its structure time itself, may it live for Aeons and Aeons!

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி