நாவினாலெ நவின்றுரைக்க நாட்டநன்று கொள்ளினும் பாவினாலெ பாங்குரைக்கப் பாவியேற்கு மேலுமோ கூவினாலெ குற்றமற்ற சொற்கள்வந்து தித்திட மேவிநாளு மாசிதாவெந் தேவதேவ தேவனே
சீர் பிரித்து
நாவினாலே நவின்று உரைக்க நாட்டம் நன்று கொள்ளினும் பாவினாலே பாங்கு உரைக்க பாவியேன்கும் ஏலுமோ? கூவினாலே குற்றமற்ற சொற்கள் வந்து உதித்திட மேவி நாளும் ஆசி தா எம் தேவதேவ தேவனே !
பொருள்
நாவினால் (உன் நாமங்களையே) உரைக்க நாட்டம் நன்றாக உண்டு என்றாலும் , அதை இலக்கணப் படி இசையாய் ஒரு பாட்டாக வடிப்பதற்கு இப் பாவிக்கு இயலுமோ ? (தன்முயற்சியால் இயலாது என்பதாம்)
ஆதலால் ஏதோ கூவினாலே நல்ல சொற்கள் வந்து உதிக்கும் படி மேவி (எம்முள் எங்கும் நீயே பரவி) அவ்வாசியை அருள வேண்டும் தேவாதி தேவர்களுக்கும் தேவனான எம்பெருமானே !
Even though I have all the desire to sing your names, glories as songs, do I, who knows nothing possess the know how of grammar to compose properly? (Clearly not, by self effort) So even if I blurt out gibberish please make them meaningful and precise words oh Lord of Everyone
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக