புதன், 16 ஜூலை, 2025

வாணுதல் நேரிழையாள் வண்ணக் கலித்துறை

 வாணுத னேரிழையாள் - வளர் வாமளைக் கூறுடையான் 

பேணுத றாயனையான் - பசுப் பேறளி பீடுடையான் 

பூணுத லாறரவான் - பனிப் பூநில வார்சடையான் 

காணுத னாளெதுவோ - கரிக் காவளர் தேவுனையே

 

தானன தானனா - தன

தானன தானனா  

 

 

வாணுத னேரிழை யாள்வளர் வாமளைக் கூறுடையான் 
பேணுத றாயனை யான்பசுப் பேறளி பீடுடையான் 
பூணுத லாறர வான்பனிப் பூநில வார்சடையான்
காணுத னாளெது வோகரிக் காவளர் தேவுனையே  

என்று சீரமைக்க இது கட்டளைக்கலித்துறை ஆகும்

 

வாள் நுதல் நேரிழையாள் வளர் வாமளைக் கூறுடையான் பேணுதல் தாயனையான் பசு பேறு அளி பீடு உடையான் பூணுதல் ஆறு அரவான் பனிப் பூ நிலவு ஆர் சடையான் காணுதல் நாள் எதுவோ கரிக்கா வளர் தே உனையே 

 

ஒளி பொருந்திய நெற்றியை உடைய உமையம்மையை வாம பாகத்தில் கொண்டவனே 

பேணுவதில் தாயைப் போன்றவனே , பசுக்களுக்குப் பேறு அளிக்கும் பீடுடைய பதியே

கங்கை ஆறு, அரவு பனிப் பொழியும் நிலவும் கொன்றை மலரும் புனைந்த அழகான சடை முடி உடையவனே

உன்னைக் காணும் நாள் எதுவோ? திருவானைக்காவில் உறையும் தேவா

You have the beautiful Uma Devi who has a lustrous forehead on your left side, you are like a mother to the Jivas and grant them immense grace oh great one! You hold the Ganges, Snake, moon and KonRai flower in your matted locks, Oh Lord who resides in Thiruvaanaikka when is the day to have your Darshan? 

 

படம் 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி