மண்ணடைந்துந் நாதனேற்ற மன்னநாளுஞ் சாற்றிய
விண்ணடைந்து பாரிஜாத மலரெடுக்க வேந்தர்தன்
கண்ணடைந்து மீண்டுநோக்கக் காயமாறு கிள்ளையாய்ப்
பண்ணடைந்து பாடுகீத வண்ணவண்ண நாதரே
மண் அடைந்து உம் நாதன் ஏற்றம் மன்ன நாளும் சாற்றிய
விண் அடைந்து பாரிஜாத மலர் எடுக்க வேந்தர்தன்
கண் அடைந்து மீண்டும் நோக்க காயம் மாறு கிள்ளையாய்
பண் அடைந்து பாடு கீத வண்ண வண்ண நாதரே!
மண் அடைந்து உமது நாதனான முருகப் பெருமானின் ஏற்றம் என்றென்றும் நிலைத்து நிற்க சாற்றிய, விண் அடைந்து ப்ரபுட தேவ மாராஜன் மீண்டும் தன் கண்களைப் பெறப் பாரிஜாத மலர்கர்கள் எடுத்து வந்தாய் ஒரு கிளியின் உருவில் சென்ற, பண்களால் பாடப் படும் இசைப்பாடல்களின் வகையில் வண்ணப் பாடல் என்ற மிக உயர்ந்த வகையில் வண்ணனாய் (மிகச்சிறந்து விளங்குபவனாய்) திகழும் (அருணகிரி) நாதர் நீரே!
You took birth in this world to spread the fame of your Lord Muruga and let them stay here forever, you went to the celestial realms to bring back the PariJatha flower for the ruling King Prabuda Deva Maharaja to get back his sight by transferring your soul into a parrot's body and among the poems that have a rythmic Chandas known as VaNNam you are the greatest of them all, oh Arunagiri Natha!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக