பக்குடுக்கை பாட்டெடுத்து மிறைமறுப்புச் சுட்டுவர் சிக்கெடுக்கு(ஞ்) சாக்கில்வந்து(ஞ்) சிக்குமிக்க வெண்ணுவர் இக்கடுக்கு வில்லெடுக்க விட்டபாண மேவுவோன் றொக்கொடுக்க விழிவிழித்தச் சொக்கனேற்ற மறிவரே?
பக்குடுக்கை பாட்டு எடுத்தும் இறை மறுப்புச் சுட்டுவர்
சிக்கு எடுக்கும் சாக்கில் வந்தும் சிக்கு மிக்க எண்ணுவர்
இக்கு அடுக்கு வில் எடுக்க இட்ட பாணம் ஏவுவோன்
தொக்கு ஒடுக்க விழி விழித்த சொக்கன் ஏற்றம் அறிவரே?
பக்குடுக்கை நன்கணியாரின் ஓரில் நெய்தல் பாடலை எடுத்துக் கொண்டு சங்க இலக்கியம் இறை மறுப்பைப் பேசுகிறது என்று சுட்டுவோர், சிக்கு எடுக்கும் சாக்கில் வந்து சிக்கை மிக்க வைக்க எண்ணுவோர்!
கரும்பின் அடுக்கினால் அமைந்த தனது வில்லை எடுக்க இஷ்ட (காம) பாணங்களை ஏவுவோனான காமனை, மறையி ஒடுங்குமாறு தனது மூன்றாம் கண்ணைத் திறந்த சொக்கனின் ஏற்றம் அறிவரோ? (இல்லை!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக