செவ்வாய், 15 ஜூலை, 2025

பொங்கு கங்கை விருத்தம் (கச்சி)

பொங்கு கங்கை நதி திங்க டங்கு சடை

மங்கை பங்க னிவ                                                          னளிநாடிச்


சிங்க மங்கை யவ ளங்க மங்க வுடன்

மங்க ளங்கொ டவம்                                                       புரிநேரம்


பொங்கு கம்பை நதி லிங்க மங்க வெழ

மங்கை கொங்கை  யணை                                       குழைநாதர்


வங்கசங்கு பதி யங்கைசங்கு சதி

தங்கு துங்க பதி                                                               கதியாமே 


தான தான தன தான தான  தன

தான தான தன தனதான 


சீர் பிரித்து:-


பொங்கு கங்கை நதி திங்கள் தங்கு சடை

மங்கை பங்கன் இவன் அளி நாடி

சிங்க மங்கை அவள் அங்கம் மங்க உடல்

மங்களம் கொள் தவம் புரிநேரம்

பொங்கு கம்பை நதி லிங்கம் மங்க எழ

மங்கை கொங்கை அணை குழை நாதர்

வங்க சங்கு பதி அங்கை சங்கு சதி 

தங்கு துங்க பதி கதி ஆமே


பொங்கு வரும் கங்கை நதியையும் திங்கலையும் தன் சடையில் புனைந்தவனும் மங்கையைத் தன் இடப்பாகமாகக் கொண்டவனுமான சிவபெருமான் தன் அருளை நாடி சிங்கத்தை ஊர்தியாக வைத்துள்ள மங்கையான சத்தி தேவி தனது உடல் அங்கங்கள் எல்லாம் நலியும்படியாக மங்களத் தவம் புரியும் நேரம், பொங்கி வரும் கம்பை நதியானது தேவி செய்த சிவலங்கத்தை விழுங்கும் படியாக பெருக்கெடுத்து வந்தது, அப்போது தேவி அவ்விலிங்கத்தை இறுக அணைத்துக் கொண்டாள், அதில் குழைந்து போனார் சிவபெருமான் ஆதலால் கச்சியம்பதியில் குழைநாதர் என்ற திருநாமத்தைத் தாங்கி உள்ளார், அவரும் வளைந்த சங்குகளைத் தன் கையில் ஏந்திய வரதராஜ பெருமானும், வளையல்களை தனது அழகிய கைகளில் அணிந்த காமாட்சி தேவியும் நாம் உய்யும் பொருட்டுச் சேவை சாதிக்குமிடம் உயர்ந்த பதியான கச்சியாம், அதுவே எமக்குக் கதியாகும்!


He who sports the ferocious Ganges and moon on his matted locks and he who has given half of himself to Uma, in order to acquire his grace Devi Parvathi who mounts the Lion undertook rigorous penance that emaciated her body, at that time the Kampa river rose ferociously as though it would drown the Shiva Linga made by Parvathi for her prayers, without flinching she hugged the Linga and protected it which won Lord Shiva's grace and he took the name Kuzhai Naathar in the divine abode of Kanchi, Kuzhai Nathar/ Ekambareshwara, Varadaraja who holds a curved Shanka in his hands and Kamakshi who sports bangles in her beautiful hands stay in this divine city to protect all living beings, and this city is our refuge!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி