களிமண்ணைக் கையுருட்டிக் கணபதியி னுருவமைத் தெளியவகை யினிப்பாக்கி யெலியேறு மிறைக்களித் தளிமண்ணை யென்றேத்த வுடனருளுங் கரிமுகனைத் தெளிமனமே நாடியவன் றிருவடியிற் றிளைமனனே
களி மண்ணைக் கை உருட்டிக் கணபதியின் உரு அமைத்து எளிய வகை இனிப்பு ஆக்கி எலி ஏறும் இறைக்கு அளித்து அளி மண்ணை! என்று ஏத்த உடன் அருளும் கரி முகனைத் தெளி மனமே நாடி அவன் திருவடியில் திளை மனனே
பொருள்-
களி மண்ணைக் கையால் உருட்டிக் கணபதியின் உரு அமைத்து எளிய வகை இனிப்புகள் சமைத்து மூஷிகம் ஏறும் இறைவனான வினாயகருக்கு அளித்து எனக்கு மண் (இடம், வீடு) அளிப்பாய் என்று ஏத்த உடனடியாக அருளும் கரி முகனை, இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காமல் தெளிவான மனத்தையே நாடி அவன் திருவடியில் திளைப்பாய் நெஞ்சே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக