கலிமலியுங் கணமதிலும் வலியமதி நனியருளும் எலிநெளியு மிளையவனி னலரடியை மனநிறுத்தி ஒலியழகின் றுதியமைத்துப் புலனைந்து மொன்றிசைத்துக் குலமொளிரக் கரங்குவிவார் தலைவணங்கத் தக்கவரே
கலி மலியும் கணம் அதிலும் வலிய மதி நனி அருளும் எலி நெளியும் இளையவனின் அலர் அடியை மனம் நிறுத்தி ஒலி அழகின் துதி அமைத்துப் புலன் ஐந்தும் ஒன்று இசைத்துக் குலம் ஒளிரக் கரம் குவிவார் தலை வணங்கத் தக்கவரே
பொருள்
கலி மலிந்து கிடக்கும் இக்கணத்திலும் வலிய மதி நமக்கு மிகுதியாக அருளும் மூஷிக வாகனத்தில் ஊர்ந்து வரும் இளைய உரு கொண்ட இறைவனின் அலர் போன்ற திருவடையை மனதில் நிறுத்தி நல்ல இசையுடன் கூடிய துதி செய்து ஐம்புலன்களும் ஒன்றிசைத்துக் குலம் விளங்கும் படியாக கரங்கூப்பி வணங்கும் அடியார்கள் நம்மால் தலைவணங்கத் தக்கவர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக