குடர்வழிவரு பிணிபிறவியை யடர்கடலிடை யெடுத்துப் படருலகினி லிடர்படுமுயிர் பழவினைகளை யறுத்து நடலையுமற நளினமுமுற நயவரமழை யளிக்கக் குடருரிவடி வரியுருவரி யளியெமதிர குறையே?
குடர் வழி வரு பிணி பிறவியை அடர் கடல் இடை எடுத்து படர் உலகினில் இடர் படும் உயிர் பழ வினைகளை அறுத்து நடலையும் அற நளினமும் உற நய வர மழை அளிக்க குடர் உரி வடிவு அரி உரு அரி அளி எமது இர குறையே?
குடல் வழி வரும் பிணி பிறவி (ஒரு அன்னையின் கருவறையினூட ஜெனிக்கும் பிறவிப்பிணி) அடர்ந்த சம்ஸார கடலில் எடுத்து, இப்படர்ந்த உலகினில் இடர் படும் உயிர் பழ வினைகளை அறுத்து நடலையும் கெடும்படியாக நளினமும் உறும் பொருட்டாக நய வர மழை அளிக்கக் குடலை உரித்தெடுக்கும் வடிவுடைய சிம்ம முகங் கொண்ட திருமால் (நரசிம்மன்) அருள் எமதாயிருக்க வெமக்கேதும் குறை உண்டோ? (இல்லை என்பதாம்)
Taking birth in a mother's womb this birth surrounded in the sea of Samsara, in this far and wide world the Jivas undergo suffer/enjoy according to their Karmas, to cut this asunder, to remove deceit, to give grace and keep bestowing (raining) new boons all the time there is Narasimha in the form of a beautiful lion who plucked out the intestines of HiranyaKashipu, when his grace is upon us do we have any problems? (Not at all!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக