வெற்பகத்து வெட்டவிட்ட வேலைவற்று வேலவன்
முற்பகட்டு மூன்றுமாய மூரலுற்ற மூலவன்
வெற்பகத்து வெள்ளெயிற்று வேதமீந்த வேழவன்
கற்பகத்து நற்பதத்தை யொன்றுசேர வாயிலே
வெற்பு அகத்து வெட்ட விட்ட வேலை வற்று வேலவன்
முன் பகட்டு மூன்று மாய மூரல் உற்ற மூலவன்
வெற்பு அகத்து வெள் எயிற்று வேதம் ஈந்த வேழவன்
கற்பகத்து நற்பதத்தை ஒன்று சேர வாயிலே
கிரௌஞ்சமென்னும் மலையின் அகத்து வெட்டவும் கடலை வற்றவும் வேலை எறிந்த முருகனும் , முன் பகட்டாக இருந்த அசுரர்கள் மூன்று புரங்களும் எரியும் படி சிரித்த மூலவனான சிவபெருமானும், மேரு மலையில் தனது வெண்ணிற தந்த்தை உடைத்து ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தை இவ்வுலகிற்குத் தந்த ஆனைமுகனும், கற்பகாம்பாளின் நன்மை பயக்குந் திருவடியை ஒன்று சேர்ந்து வீடு பேறு அடைவதற்கு வாயிலாக உள்ளனர்!
Lord Murugan who with his magical weapon of vEl destroyed the Krouncha hill and made the seas dry, Lord Shiva who with his smile destroyed the three cities of the haughty asuras, Lord Ganesha who wrote the 5th Veda/Mahabharatha by breaking his white tusk on the Meru mountain all stand as gatekeepers to attaining salvation to reach the holy feet of Karpagambal and attain salvation!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக