வெற்பெடுத்த வில்லனோடு விடையமர்ந்த வேல்விழி
வெற்பரன்றன் வாமபாகி வெற்புராசன் குமரியாந்
தற்பரத்தி னற்புதங்க ணற்பதங்க ளறியுமோ
கற்பகத்தின் பொற்பதங்கண் மூலவாதி சிற்பமே
வெற்பு எடுத்த வில்லனோடு விடை அமர்ந்த வேல் விழி
வெற்பு அரன் தன் வாம பாகி வெற்பு ராசன் குமரியாம்
தற்பரத்தின் அற்புதங்கள் நற் பதங்கள் அறியுமோ?
கற்பகத்தின் பொற் பதங்கள் மூல ஆதி சிற்பமே
மேரு என்னும் மலையை வில்லாகக் கொண்டவனுடன் ரிஷப வாகனத்தில் அமர்ந்த வேல் போன்ற விழி உடையவள் கயிலாய மலைக்குரிய அரனின் இடப் பக்கத்தினள் இமவானின் குமாரியான இருப்பதிலே மேலான பொருளானவளின் அற்புதங்கள் என்னவென்று சொல்லால் விரிக்க இயலுமா என்ன? ஏனெனில் அக்கற்பகாம்பாளின் பொன்னான வீடளிக்கும் பாதங்கள் சிற்பம் போன்ற அழகியதும் ஆதியும் மூலமுமாம்!
She who has sharp eyes sits atop Rishaba with Lord Shiva who has Mount Meru as his bow, and she occupies the left side of Lord of Kailash and she is the daughter of Himavan, and she is that which has no higher principle anywhere, can words describe her greatness?(clearly not) That KarpagambaL's golden feet which grant salvation are the source of all sources and is perfect like a sculpture!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக