ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

வேதமாதி விருத்தம்

வேதமாதி கீதநாதம் வேண்டிநின்ற பொற்கழல்
கோதிலாத மூவர்தேவ ரேத்துகின்ற நற்கழல்
சீதைராதை கோதைசோதை கோதிலோதை யார்கழல்
போதுநாதை யாதுமாதி சீதபாத போததே 

 

 

வேதம் ஆதி கீத நாதம் வேண்டி நின்ற பொற் கழல்

கோது இ(ல்)லாத மூவர் தேவர் ஏத்துகின்ற நற் கழல்

சீதை ராதை கோதை சோதை கோது இல் ஓதை ஆர் கழல்

போது நாதை யாதும் மாதி  சீத பாத போது அதே!

 

வேதமுதல் கீத நாதங்கள் யாவும் வேண்டித் தேடுகின்ற பொற்கழலும், குற்றமற்ற மும்மூர்த்திகளும் தேவர்களும் ஏத்துகின்ற நற்கழலும், சீதை, ராதை, கோதை யசோதை, குற்றமற்ற கடல் நிறத்தவளான பாஞ்சாலியாகவும் உருவெடுத்தவளின் அழகிய கழலும், பொழுதுகளின் தலைவியாய் இருப்பவளும் யாவற்றிற்கும் ஆதியானவளுமான ஆதி பராசத்தியின் தண்மை மிகுந்த பாதத் தாமரைகளேயாம் !

 

The golden feet that Vedas and other holy sounds search for, the holy feet that the Trimurthis and all Devas constatnly keep praising, the beautiful feet of the manifestations like Seetha,Radha,AandaL, Yashodha and Draupadi, are the cool and Lotus feet of Adi Parashaksti who is upholder of time and is the source of things!

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி