வியாழன், 28 ஆகஸ்ட், 2025

திருவளரும் கலிப்பா

திருவளரும் பெருவயிறு திகழ்செவியோ குறைகளையும் நெருடிவரு வினையறுக்கு நிகரில்லா மருப்பொன்று கருவளருங் கலையளிக்குங் கரிமுகமே பணியமரும் அரைஞாணோ யோகவுரு வெனவுணர்ந்து பணிமனனே

 

 திரு வளரும் பெரு வயிறு , திகழ் செவியோ குறை களையும், 

நெருடி வரு வினை அறுக்கும் நிகர் இல்லா மருப்பு ஒன்று

 கரு வளரும் கலை அளிக்கும் கரிமுகமே! பணி அமரும் 

அரை ஞாணோ யோக உரு என உணர்ந்து பணி மனனே!

 

பொருள்-

செல்வத்தின் வளர் நிலையாக பெரு வயிறும், அன்பர்களின் குறையைக் கேட்டு அதனைக் களையும் பொருட்டு அமைந்த பெரிதாகத் திகழும் செவிகளும், நெருடி வரும் வினைகளை அறுக்கும் நிகர் இல்லாத ஏக தந்தமும் கருவினில் வளரும் கலையையும் அளிக்கும் யானை முகம், பாம்பு அரை ஞாண் கயிறாக இருப்பது குண்டலினி யோக உருவாக அமைந்துள்ளது என்ற விநாயகரின் உருவைப் பணி மனனே! 

 

படம் 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி