வியாழன், 28 ஆகஸ்ட், 2025

உருட்டிவிட கலிப்பா

உருட்டுவிடக் குறுமுனியின் கமண்டலத்தைக் காவிரியா பொருதுவந்தாய்க் கயமுகனைப் பொழிகருணை யுமைமைந்தா அருமைறையி னரும்பொருளே வினையறுக்கும் முதற்பொருளே கருமயிலோன் கந்தனிடங் கனிகவர்ந்த சுடர்மதியே

 

 

உருட்டி விடக் குறுமுனியின் கமண்டலத்தை காவிரியா பொருது உவந்தாய்க் கயமுகனைப் பொழி கருணை உமை மைந்தா அரு மறையின் அரும் பொருளே வினை அறுக்கும் முதற்பொருளே கரு மயிலோன் கந்தனிடம் கனி கவர்ந்த சுடர் மதியே! 

 

குறுமுனியான அகத்தியரின் கமண்டலத்தை உருட்டிவிட்டுக் காவிரியாக வடிவெடுக்க வைத்தார் , கஜாசுரனை போர் செய்து மாய்த்த உமை மைந்தன் விநாயகர், வேதங்களின் அரும்பொருளை திகழ்பவர் மற்றும் வினை அறுக்கும் முதல் பொருளானவர், அவர் தான் தம்பி முருகனிடம் கனியை தன் சுடர்மதியால் கவர்ந்தார்!

 

படம் 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி