அப்பணிந்த வப்பனைந்து மொப்பிலம்மை ஒன்றுமீ
சுப்பணிந்த தப்பிலாறு மொப்புணர்ந்த வன்பர்தம்
முப்பணிந்து குப்பிறந்த வெப்புமாயு நாதர்தம்
செப்பணிந்த வெற்பனாமம் பொற்புணர்ந்து செப்பவே
அப்பு அணிந்த அப்பன் ஐந்தும் ஒப்பு இல் அம்மை ஒன்றும் ஈ
சுப்பு அணிந்த தப்பு இல் ஆறும் ஒப்பு உணர்ந்த அன்பர்தம்
முப் பணிந்து குப் பிறந்த வெப்பு மாயும் நாதர் தம்
செப்பு அணிந்த வெற்பன் நாமம் பொற்பு உணர்ந்து செப்பவே
பொருள் கோண்முறை
அப்பணிந்த அப்பன் ஐந்தும் ஒப்பிலம்மை ஒன்றும் ஈ சுப்பு அணிந்த தப்பிலாறும் ஒப்புணர்ந்த அன்பர்தம் குப்பிறந்த வெப்பு மாயும் முப்பணிந்து நாதர் தம் செப்பணிந்த வெற்பன் நாமம் பொற்புணர்ந்து செப்பவே!
கங்கையைத் தன் சடாமுடியில் அணிந்த சிவபெருமான் தனது ஐந்து முகங்களையும், ஒப்பிலாத பராசத்தியன்னை தனது ஒரு முகத்தையும் ஈந்து சுப்பிரமணியன் ஆறு தப்பிலாக முகங்கள் கொண்டு பிரதிபலிக்கிறான் (சிவசத்திரூபமாய் திகழ்கிறான் முருகண்) இவ்வுண்மையை உணர்ந்து பத்தர்கள் முழுவதுமாகப் பணிந்து, அருணகிரிநாதர் பெருமான் சொற்களை அணிகலனாக அணியும் மலைக்கு அதிபதியான முருகனின் நாமத்தை அதன் அழகை உணர்ந்து சொல்ல அவர்கள் இவ்வுலகில் பிறப்பெடுத்து படும் வெம்மைகளை வெல்வார்கள்!
Those devotees who realise that Lord Shiva who wears the Ganges in his matted locks and the incomparable Adi ParaShakti both gave 5 and 1 of their faces to their son Subramania who wears them as his 6 faultless faces, their troubles faced in the earthly birth cycle will vanish if they totally surrender and chant the name of Lord Murugan who wears ArunagiriNathars songs as his ornaments understanding the beauty of the name!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக