வியாழன், 21 ஆகஸ்ட், 2025

திங்கள் விருத்தம்

திங்கடுண்ட பிறையணிந்த வங்கைமீட்டு வீணையை மங்கைசாயு தோணெகிழ்ந்து துங்ககீதம் பாடுதோ பொங்குகங்கை முடியடக்கச் சங்குநாத மானதோ தங்கவெற்பின் வண்ணமென்ன நங்கைபங்க வீசனே

 

 

திங்கள் துண்ட பிறை அணிந்த அம் கை மீட்டு வீணையை மங்கை சாயு(ம்) தோள் நெகிழ்ந்து துங்க கீதம் பாடுதோ பொங்கு கங்கை முடி அடக்க சங்கு நாதம் ஆனதோ தங்க வெற்பின் வண்ணம் என்ன நங்கை பங்க ஈசனே ! 

 

திங்களின் துண்ட பிறை அணிந்த அழகிய கைகள் வீணையை மீட்டும் படி, மங்கையான உமையம்மை உனது தோளில் சாய அது நெகிழ்ந்து உயர்ந்த கீதம் பாடிகின்றதோ? பொங்கும் கங்கை நதி நினது சடையினில் அடக்கியதனால் அதன் ஓசை குன்றி வெறும் சங்கின் ஓசை போன்று ஒலிக்கின்றதோ? பொன்மலையான கயிலாயத்தின் வண்ணம் நின் வண்னத்தை ஒக்குமன்றோ மாதொரு பாகனே ஈசனே!

 You wear the crescent moon on your head as an ornament and your beautiful hands are playing the Veena, while Uma is resting on your shoulder this makes your shoulder happy and creates divine musical songs! By hiding and controlling the Akash Ganga in your matted locks you have reduced its roaring noise to a small one like a conch is it not? And your colour is akin to that of the Golden Mountain (Kailash) oh Lord Eesha, the giver of half to the lady (Uma)!

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி