வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

நாகமேந்தி விருத்தம்

நாகமேந்தி மாரிகாத்த நாகமாடு நாயகன் சோகமேந்தி வில்விடுத்த ஶ்வேதனுய்ய வாதுதேர்ப் பாகனாக கீதைசொன்ன பாங்கினேரி லாவுள மோகநாத னென்றுவந்து முற்றுமென்னை யாள்வனே

 

 

நாகம் ஏந்தி மாரி காத்த நாகம் ஆடு நாயகன் 

சோகம் ஏந்தி வில் விடுத்த ஶ்வேதன் உய்ய வாது தேர்ப்

 பாகனாக கீதை சொன்ன பாங்கில் நேர் இல் ஆ உ(ள்)ள 

மோக நாதன் என்று வந்து முற்றும் என்னை ஆள்வனே ? நாகம் - மலை , பாம்பு

 ஶ்வேதன் -அருச்சுனன்

கோவர்த்தன மலையை குடையாக ஏந்தி மாரியினிறு தன்னூர் மக்களையும் மாக்களையும் காத்தவனும், காளிங்கன் மேலேறி நாட்டியம் ஆடும் நாயகனும், சோகத்தின் வசப்பட்டு மாபாரதப் போரில் தனது வில்லை விடுத்த போர் செய்ய மாட்டேன் என்ற அருச்சுனன் உய்யும் பொருட்டும் (பாருய்யும் பொருட்டும்) அவனுக்கு தேர்ப்பாகனாக இருந்து பகவத் கீதை சொன்னவனும் அழகில் நேரில்லாதவனும், உயிர்களின் உள்ளங்கவர் கள்வனுமான ஆன நாதன் கண்ணபிரான் என்று வந்து என்னுள்ளத்தை முற்றும் ஆள்வனோ?

He who picked up the Govardhana hill to save his people and flock from the wrath of Indra's unceasing rain, the hero who danced on Kalinga the serpent's head,  when afflicted with despondency Arjuna gave up fighting and put down his bow Gandeeba amidst the Mahabharatha war, he who cheered him up and gave the divine solution of Bhagavath Gita as his charioteer, he whose beauty is peerless and causes delusion among the heart of all living beings, that SriKrishna when will he come and take over me completely?

 

படம் 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி