மாமயில் வாகனத்தான் - மலர் மார்பெழின் மாமனைப் போல்குணத்தான் காமனைச் சுட்டெரித்தான் - பொறி கங்கையில் வீழ்ந்திட விங்குதித்தான் தாமரை மேலுதித்தான் - பொருள் தாமறி யாதது மேல்சிறைத்தான் யாமளை வேல்பிடித்தான் - வெளி யானைத னேரிழை கற்பகத்தானே
மாமயில் வாகனமாகக் கொண்டவன், மலர் மார்பு திகழும் எழில் கொண்ட தனது மாமனான திருமாலைப் போன்ற குணத்தவன். காமனைச் சுட்டெரித்த சிவபெருமான் நெற்றிக் கண்ணில் பொறியாகத் தோன்றி கங்கையில் உதித்தவன், திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த பிரமன் ஓங்காரப் பொருள் அறியாத போது அவனைச் சிறைப் பிடித்தவன், யாமளை ஆகிய ஆதி பராசத்தி அளிக்க வேலைக் கையில் கொண்டவன், வெள்ளை யானையான ஐராவதம் வளர்த்த தேவயானை அம்மையாரை கற்பு மணம் புரிந்த கேள்வன் முருகன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக