கீதைதந்த மேன்மைநின்ற பாண்டுமைந்தன் பாங்கெதோ
தாதைதந்த வாயிரத்தை யோதநின்ற மாண்பெதோ
பாதைதந்த மேதைதாதை விட்டுசித்தன் பேதையெங்
கோதைதந்த தமிழெமக்கு நூறுபத்து நாமமே
கீதை தந்த மேன்மை நின்ற பாண்டு மைந்தன் பாங்கு எதோ?
தாதை தந்த ஆயிரத்தை ஓத நின்ற மாண்பு எதோ?
பாதை தந்த மேதை தாதை விட்டுசித்தன் பேதை எம்
கோதை தந்த தமிழ் எமக்கு நூறு பத்து நாமமே
பகவான் அளித்த பகவத் கீதையின் மேன்மையை அறிந்து அதன் படி நடக்கும் பாங்கு பாண்டு மைந்தன் அருச்சுனன் போல எம்மிடம் உள்ளதோ?(அன்று) பிதாமகர் பீஷ்மர் உரைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம் உரைக்கவம் அதன் மேன்மையின் படி வாழ்வில் நிற்கவும் எமக்கு மாண்பு உள்ளதோ? (அன்று) திருமாலின் பாதை விரித்த மேதையான தந்தை விட்டுசித்தரின் புதல்வியான எம் கோதை தந்த தமிழ்ப் பாசுரங்கள் எமக்குச் சஹஸ்ரநாமம் போலவாம்!
Do we have it in us to follow the Bhagavath Geetha like the impeccable devotee Pandu's son Arjuna? Do we have it in us to recite and follow the Vishnu Sahasranama which was narrated by Bhishma to the Pandavas? Despite our limitations, for us we have the vaishnava path layer Periyazhwar's daughter our very own AaNdaaL's Sangath thamizh with us, which we value as dearly as the thousand names of the Lord!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக