எங்கு நிறையிறைவா வெங்கண் மனத்துறைவா
தங்கு மறிவளிவா தந்தி முகற்கிளையா
சங்கத் தமிழ்முதல்வா சங்கை தவிர்த்திடவா
கங்கை நதிப்புதல்வா கந்தா கவியரசே
எங்கும் நிறை இறைவா எங்கள் மனத்து உறை வா
தங்கும் அறிவு அளி வா தந்தி முகற்கு இளையா
சங்கத் தமிழ் முதல்வா சங்கை தவிர்த்திட வா
கங்கை நதிப் புதல்வா கந்தா கவி அரசே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக