ஓராதி யீராகி மும்மூர்த்தி நான்மறையா
பாரந்த வைம்பூதம் பாங்காறு பாதையொ
டீரே ழுலகாளு மெண்ணெட்டாத் தொன்னவமே
பாரேத்து வெற்றிநாள் பத்து
சீர் பிரித்து :-
பார் அந்த ஐம் பூதம் பாங்கு ஆறு பாதையொடு
ஈர் ஏழ் உலகு ஆளும் எண் எட்டாத் தொல் நவமே
பார் ஏத்து வெற்றி நாள் பத்து
ஆதி நிலையில் நிர்குண பிரம்மமாக இருந்து பின்பு சிவசக்தி என்ற இரு நிலைக்கு விரிந்து , பின்பு மும்மூர்த்திகளாகி, அதன் பின்னர் நான்கு வேதங்களாகி, ஆகாசம் முதல் பார் ஈறாக ஐம் பூதங்களாக விரிந்து ஆறு அழகிய சமயங்களும் பதினான்கு லோகங்களும் ஆளும் எண்ணத்திற்கு எட்டாத தொன்மையானவளே அதே சமயம் என்றும் இளமை குன்றாதவளே உன்னை, உலகும் முழுதும் ஏத்தும் தினமான பத்தாம் நாள் விஜய தசமி ஆகும்
From the form of Nirguna Parabrahmam, later dividing into Shiva Shakti aikya roopa, then becoming the trimurtis and the four vedas, becoming the five elements that end with the earth, and ruling the 6 religions and 14 worlds, and being quite transcendent from mind or thought you are the oldest one but always remain young too, the whole world sings your praises on the tenth day ie Vijaya Dashami
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக