மகேசனிள மைந்தன் மறவள்ளி நாதன்
குகேசன் குறைகளை யாறு - முகேச
னருண்முகத் தொன்றை யணுக வடைவோந்
தெருண்மனஞ் சீர்சுந்த ரம்
மகேசன் இள மைந்தன் மற வள்ளி நாதன்
குகேசன் குறை களை ஆறுமுகேசன்
அருள் முகத்து ஒன்றை அணுக அடைவோம்
தெருள் மனம் சீர் சுந்தரம்
மகேசனின் இள மைந்தந்தான வேடர் குலச் சிறுமி மறவள்ளி நாதனான குகேசனின் பத்தர்களின் குறைகளைக் களைய வல்ல ஆறு முகத்தை உடைய ஈசனான முருகனின் ஒரு அருள் முகத்தையாவது அணுகுவோமே ஆயின் நாம் தெருளை (தெளிவை) உடைய மனத்தையும் சீரையும் (செல்வத்தையும்) சுந்தரத்தையும் (அழகையும்) பெறுவோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக