நிறைமதி பாம்பு நிழற்கோள் விழுங்கு
குறைபிடி வேளை குறைதீர் - நிறைமதி
கொண்டிறை நாம குணமோதப் பன்மடங்
குண்டா முரைத்த பலன்
நிறை மதி பாம்பு நிழல் கோள் விழுங்கு
குறை பிடி வேளை குறை தீர் நிறை மதி
கொண்டு இறை நாம குணம் ஓத பன்மடங்கு
உண்டாம் உரைத்த பலன்
நிறை மதியை பாம்பு வடிவில் உள்ள நிழற்கோளான இராகு விழுங்கு கிரகணப் பீடை பிடிக்கும் வேளை. குறை தீர்ந்த நிறை மதி கொண்டு இறை நாமத்தையும் குணத்தையும் நாம் ஓதினோமே ஆயின் அப்புணியம் பன்மடங்கு பலன் அருளும் என்பது பெரியோர்கள் வாக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக