செவ்வாய், 9 செப்டம்பர், 2025

செவ்வாயிற் செவ்வேள் விருத்தம்

 கரையில் கருணைக் கடலே கடையில் லருளு மருளே உரையி லுணரா வுயர்வே உணர்வி லுறையு முயிரே புரையில் புனிதப் புகழே புடைசூ ழிருமா தழகே விரைவின் மதிவா குகனே வினையின் மறவா திரவே

 

 

கரை இல் கருணைக் கடலே

கடை இல் அருளும் அருளே

உரையில் உணரா உயர்வே

உணர்வில் உறையும் உயிரே

புரை இல் புனிதப் புகழே

புடை சூழ் இரு மாது அழகே

விரைவில் மதி வா குகனே

வினையில் மறவாது இரவே

(அறுசீர் விருத்தம்) 

 

எல்லை இல்லாத கருணைக் கடலே! கடை வீடு பேறு அருளும் அருளே! ஓர் உரைக்குள் அடக்கவியலாத உயர்வே! உணர்வுகளுக்குள் உறையும் உயிரே! குற்றமற்ற புனிதத் திருப்புகழாய் விளங்குபவனே! பக்கலில் இரு அழகான தேவியர் சூழக் காட்சித் தருபவனே! விரைவில் எனது மதிக்கு வந்து அதை இயக்குவாய் குகனே, வினைவழியே இவ்வுலகில் நான் உன்னை மறவாது இருக்கும் படியாக.

 

Oh ocean of boundless mercy, oh personification of grace which grants us the final salvation! You have heights that cannot be expressed by words, you dwell as the life in feelings! You also are of the form of the blemishless holy Thiruppugazh sung by ArunagirinAthar! You grace us with a view of being surrounded by two astoundingly beautiful Devis! Please come quickly and dwell in my mind oh Guha, lest I should be caught up in the worldy Karmas(works) and be forgetful of you. 

படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி