ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

மூவடி வெண்பா

மூவடி வைத்து முழுது மளந்தானின் சேவடி பற்றிச் சிறப்புறுவார் – நாவடியிற் கற்கண் டடக்கக் கரையுஞ் சுவையன்ன தற்கொண்டாற் போன்றிரு தாள்

 

 

மூ அடி வைத்து முழுதும் அளந்தானின் சேவடி பற்றிச் சிறப்பு உறுவார் நா அடியில் கற்கண்டு அடக்கக் கரையும் சுவை அன்ன தன் கொண்டான் போன்று இரு தாள்

 

மூன்றடியில் அனைத்து அண்டங்களையும் அளந்தவனான வாமனின் சேவடியைப் பற்றிச் சிறுப்பு உறுவார் எவ்வாறு என்றால், தன் முயற்சியின்றி நாக்கடியில் வைத்த கற்கண்ட எப்படி தானாக கரைந்து முழுதும் இனிப்புச் சுவை பரவும்படி செய்கின்றறோ அதே போன்று

 

தன்னைக் (மாவலியைக்) கொண்டவனான திரிவிக்கிரமனின் பெருமக்குரிய தாளானது தானெ வந்து ஆட்கொண்டு நற்கதியும் அளித்தது. பெருமாளின் பத்தர்கள் தன்முயல்வைத் தவிர்த்துப் பெருமானே வழியாகவும் அடையும் இடமாகவும் உள்ள பிரப்பன்னர்கள் என்க!   

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி