செவ்வாய், 14 அக்டோபர், 2025

அள்ளியள்ளி விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 அள்ளியள்ளி யளியளிக்கும் வள்ளிதேவி நாதனைத்

தள்ளிநின்று கண்டுவக்க வுள்ளதாகந் தீருமோ
வுள்ளியுள்ளி யுள்ளமெங்கும் பரவிநின்ற கந்தனை
ள்ளியள்ளி யாசைதீர வனுபவிக்க வேண்டுமே


அள்ளி அள்ளி அளி அளிக்கும் வள்ளி தேவி நாதனை
தள்ளி நின்று கண்டு உவக்க உள்ள தாகம் தீருமோ?
உள்ளி உள்ளி உள்ளம் எங்கும் பரவி நின்ற கந்தனை
அள்ளி அள்ளி ஆசை தீர அனுபவிக்க வேண்டுமே !

Goddess Valli's Lord who grants grace boundlessly, is it enough to see him from a distance and be happy about it? We his devotees who constantly think about him with our minds and make him fill the space of our mind fully, want to consume him boundlessly too to our hearts content!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி