பண்ணளந்த பாவளிக்கும் பாவநாசி பங்கயம்
கண்ணளந்து பிம்பநோக்கி மீனடித்த வில்லனின்
மண்ணழுந்து தேர்நடத்தி மகுடங்காத்த மாயனின்
மண்ணளந்த விண்ணளந்த மன்னளந்த பாதமே
பண் அளந்த பா அளிக்கும் பாவ நாசி பங்கயம்
கண் அளந்து பிம்பம் நோக்கி மீன் அடித்த வில்லனின்
மண் அழுந்து தேர் நடித்தி மகுடம் காத்த மாயனின்
மண் அளந்த விண் அளந்த மன் அளந்த பாதமே
சுற்றும் மீனாகிய இலக்கினை, அதன் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டே தனது கண்ணால் அளந்து அம்பெய்தி அடைந்த வில் கலையின் வல்லவனான அர்ச்சுனனின் மகுடத்தை மாபாரதப் போரில் மண் அழுந்தும் படியாகித் தேரை அழுத்தி அவனது பாகனாக இருந்து காத்த மாயனின் (கண்ணனின்) மண்,விண் மஹாபலி மன்னனின் தலையையும் அளந்த பாதங்கள் தாம், பாவலர்களுக்கு பா அளிக்கும் பாவத்தை எல்லாம் அழிக்கும் தாமரை மலர்களாம் !
He who saved the warrior, who could see the reflection and hit the target of a fish, (Arjunas) head in the battle of Mahabharatha, by pushing the chariot to the ground, that Lord Narayana's feet which measured the earth, heavens and King Mahabali's head, is the holy lotus feet that destroys all sins, grant poets their poems which are accompanied by proper music!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக