திங்கள், 27 அக்டோபர், 2025

ஆறாறைத் தாண்டி கட்டளைக் கலித்துறை

ஆறாறைத் தாண்டி யணிதிக ழாண்டி யசைவறியா

நீறானிற் றோன்று நெருப்புரு ஞான்று நிகர்பகர
வேறேது மில்லா விழிவிழை யாற்றை வினயமுடன்
கூறாத நெஞ்சே குறைபிறப் போநீ குவலயத்தே




ஆறு ஆறை தாண்டி அணி திகழ் ஆண்டி அசைவு அறியா
நீறானின் தோன்று நெருப்பு உரு ஞான்றும் நிகர் பகர
வேறு ஏதும் இல்லா விழி விழை ஆற்றை வினயமுடன்
கூறாத நெஞ்சே குறை பிறப்போ நீ குவலயத்தே


முப்பத்தாறு தத்துவத்திற்கும் அப்பாற்பட்டு நிற்கும் ஆண்டியான, அசைவு என்பதே அறியா சிவ பெருமானின்று தோன்று நெருப்பு உருவான , என்றும் நிகர் ஒன்று சொல்ல வேறேதும் வஸ்து இல்லாத, விழி விழையும் வழியான முருகப் பெருமானை வினயத்துடன் அழைக்காத நெஞ்சமே, நீ என்ன இவ்வுலகில் குறைபிறப்பா ஏன் இவ்வாறு செய்கின்றாய் ?


The Ascetic who is beyond the thirty six tatvas, who emerged from the unmoving Shiva's third eye as a spark of fire, who does not have anything even close to explain as a metaphor ever, who is the path which is so pleasing to the eye, oh heart you do not lovingly call upon that Lord Muruga with humility, why so, are you a birth with deficiencies?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி