வார்த்தையில்லை பொருளுமில்லை வாஞ்சையில்லை கவியினில்
நேர்த்தியில்லை நளினமில்லை யாப்பறிந்த பயனுமென்
சீர்த்தியில்லை த்ருப்தியில்லை வாசகர்க்குச் சற்றுமே
கார்த்திகேய முத்தமிழ் கடையனுக்கு மருள்வையே
சொல்லில் அதன் பொருளில் தேர்ச்சியோ அழகோ இல்லை கவிகளில், அதில் நேர்த்தியில்லை நளினமுமில்லை பின்னர் யாப்பு மட்டும் அறிந்த பயன் யாது? சீர்த்தி இல்லை வாசகர்க்கு அதை படித்து நிறைவும் இல்லை சிறிதளவும், கார்த்திகேய! முத்தமிழ் கடவுளே இக்கடையனுக்கும் தமிழ் அருளை வழங்க மாட்டாயோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக