செவ்வாய், 28 அக்டோபர், 2025

தொலைத்தேனனை விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

தொலைத்தேனெனை மலைத்தேவனி னலர்த்தாமரை யழகில் 

மலைத்தேனவன் சலிப்பேதுமி லமர்ப்போர்க்கள நகைப்பில் 

அலைத்தேவுழ றிரைப்போலுறை யடங்காவென  தகத்தில் 

நிலைப்பேனென நிதங்காத்திடு குகத்தேவனென் வியப்பே 



தொலைத்தேன் எனை மலைத் தேவனின் அலர்த் தாமரை அழகில்

மலைத்தேன் அவன் சலிப்பு ஏதும் இல் அமர்ப் போர்க்கள நகைப்பில்

அலைத்தே உழல் திரைப்போல் உறை அடங்கா எனது அகத்தில் 

நிலைப்பேன் என நிதம் காத்திடு குகத் தேவன் என் வியப்பே !







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி