மாலைநீக்கு மாலைநீக்க மேன்மைவீடு கிட்டுமோ
சூலைநீக்கு சூலைநீக்க வாத்மஞான மெட்டுமோ
வேலைநீக்கு வேலைநீக்க விண்ணுமண்ணு மண்டுமோ
ஓலைநீக்கு வாலைநோக்கு போதறிந்திங் குய்மினே
மயக்கத்தை நீக்கக்கூடிய திருமாலை நம் வாழ்வினின்று நீக்க நமக்கு மேன்மையான வீடு கிட்டுமோ (கிட்டாது)
அப்பர் பெருமானின் சூலை நோயை நீக்கும் திரிசூலமேந்தும் மஹாதேவரை நம் வாழ்வினின்று நீக்க நமக்கு ஆத்ம ஞானம் தான் எட்டுமோ? (எட்டாது)
கடலை வற்றவைக்கவல்ல வேலாயுதத்தை உடைய தலைவனான முருகனை நமது வாழ்வினின்று நீக்க நமக்கு விண்ணுலகமோ மண்ணுலகமோ பக்கம் கூட அண்டாதே !
இயம தூதர்கள் நம்மை நோக்கி வரும் வேளை அத்துன்பத்தை நீக்க வல்ல வாலையின் நோக்கு (ஆதி பராசத்தியின் கடைக்கண்கள்) நம்மைக் காக்கும் என்றறிந்து உரிய பொழுதில் இவ்வாழ்வின் பயனாகிய உய்வை அடைவோமாக! (அனைத்து தெய்வத்தின் இயங்கு சத்தியாக பெண்வடிவே உள்ளது என்பதும் எண்ணத்தக்கது!)
இறைத்துணை இல்லாத வாழ்வில் ஏதுமில்லை என்பது கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக