குறிஞ்சிவாழு மாண்டவர்கண் கொஞ்சிபேச வாசையா
செறிந்தஞான மாழ்தவங்க டுறந்தவாழ்க்கை தூநெறி
மறந்திராத மாட்சிபண்ணி சைத்தபாட்டு வேண்டிலை
அறிந்தயாவு மகற்றிவைத்து மன்பையென்றுந் தருகவே
குறிஞ்சி வாழும் ஆண்டவர்கண் கொஞ்சி பேச ஆசையா ?
செறிந்த ஞானம் ஆழ் தவங்கள் துறந்த வாழ்க்கை தூ நெறி
மறந்து இராத மாட்சி பண் இசைத்த பாட்டு வேண்டி(ல்)லை
அறிந்த யாவும் அகற்றி வைத்து உம் அன்பை என்றும் தருகவே !
குறிஞ்சியாண்டவரிடம் கொஞ்சிப் பேச நாம் ஆசைப் படுவோமே ஆயின் , நமக்குச் செறிந்த ஞானமோ ஆழ் தவங்களோ துறவோ தூய நெறி மறவாத மாட்சியோ பண் இசைத்த பாடலோ வேண்டியதில்லை , நாம் அறிந்த யாவற்றையும் அகற்றி நமது அன்பை மட்டும் என்றும் அவனுக்கு அளித்தலே போதுமானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக