சனி, 11 அக்டோபர், 2025

சீயமிட்ட பிச்சை விருத்தம்

 சீயமிட்ட பிச்சையிந்தச் சீருடைத்த சிந்தனை

காயமுற்ற விச்சைவேக மாயவாயன் வந்தனை
நேயமுற்று நெஞ்சமர்ந்த நேமியானி னெட்டினைத்
தோயமிட்டு மண்ணணிந்த தூயதேக மெட்டவே


சீயம் இட்ட பிச்சை இந்த சீர் உடைத்த சிந்தனை காயம் உற்ற இச்சை வேக மாய ஆயன் வந்தனை நேயம் உற்று நெஞ்சு அமர்ந்த நேமியானின் எட்டினை தோயம் இட்டு மண் அணிந்த தூய தேகம் எட்டவே !

இக்காயத்தால் உற்ற இச்சை வேக மாய ஆயனை வந்தனை செய்து, நேயமுற்று நெஞ்சுக்குள் வந்தமர்ந்த நேமியானின் எட்டெழுத்து மந்திரத்தை , நீரும் திருமண்ணும் குழைத்து அணிந்த அவன் இருப்பிடாமான எமது தூய தேகம் எட்டச் சீரான சிந்தினை உதிக்கச் செய்தது நரசிம்மர் இட்ட பிச்சையேயாம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி