புதன், 19 நவம்பர், 2025

உமையாளடி சரணே விருத்தம் - 3

விடையானிட முடையாடுடி யிடையாண்மல ரடியாள்

விடையானடு மிடையானுடன் படிமீதுதி யிடையாள்
அடியாரிடர் நொடிதீர்த்திடு பரிவார்கடை விழியாள்
முடிமீதணி மதிவாணுத லுமையாளடி சரணே


சீர் பிரித்து

விடையான் இடம் உடையாள் துடி இடையாள் மலர் அடியாள் விடை ஆன் அடும் இடையான் உடன் படி மீது உதி இடையாள் அடியார் இடர் நொடி தீர்த்திடு பரிவு ஆர் கடை விழியாள் முடி மீது அணி மதி வாள் நுதல் உமையாள் அடி சரணே

பொருள்

விடையேறும் சிவபெருமானின் இடப் பாகத்தாள் , துடி போன்ற இடையை உடையவள், மலர் போன்ற பாதம் கொண்டவள், ஆன் விடையை அடக்கி நப்பின்னையை மணந்த இடையனான கண்ணபிரானுடன் உதித்த சகோதரி, அடியார் இடரை நொடியில் தீர்த்திடும் பரிவுடைய கடைக்கண்கள் உடையவள் , தன் தலையில் அணிகின்ற பிறை மதியைப் போன்ற ஒளிர்கின்ற நெற்றியை உடைய உமையாளின் அடியே நமக்குச் சரணம்

She who occupies the left side of Lord Shiva who has a bull( Nandi as his mount) and she who has a waist like damuru and feet like flowers, she who took birth into the clan of Yadavas on this earth as a sister to Lord Krishna, the cowherd who tamed bulls to win the hand of Nappinnai, she who removes the distress of devotees in an instant with her ever compassionate side eye glances, she who has a forehead so shining and in the shape of the crescent moon she wears on her head, that Goddess Uma's feet is our refuge!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி